பாலம் சாலையில் ஓட்டை வாகன ஓட்டிகள் திக்...திக்...
பள்ளிப்பாளையம், நவ. 9-குமரன் நகர் பகுதி ஒடையின் குறுக்கே, பாலம் சாலையில் ஏற்பட்டுள்ள ஓட்டையால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.பள்ளிப்பாளையம் அருகே, ஆவத்திபாளையம் அடுத்த குமரன் நகர் பகுதியில் ஓடை உள்ளது. இந்த ஓடையின் குறுக்கே, கடந்த, நான்கு மாதங்களுக்கு முன் புதிய பாலம் கட்டப்பட்டு, தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த பாலத்தில் டூவீலர், கார், சரக்கு வாகனம், வேன் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் வகையில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் கடைசி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தார்ச்சாலையில், 'ஓட்டை' விழுந்துள்ளது. வாகனங்கள் செல்ல செல்ல, இந்த ஓட்டை அதிகரித்து பெரிய பள்ளமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே பயணித்து வருகின்றனர்.எனவே, பாலம் சாலையில் விழுந்துள்ள ஓட்டையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.