கிரீன் மேஜிக் பிளஸ் பாலுக்கு உற்பத்தியாளர்கள் வரவேற்பு
நாமகிரிப்பேட்டை: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் பொதுச்-செயலாளர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி-ருப்பதாவது:ஆவின் நிறுவனம், 'கிரீன் மேஜிக் பிளஸ்' என்ற வகை பாலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இப்பாலில், 4.5 சதவீதம் கொழுப்புச்சத்து, 9 சதவீதம் கொழுப்பில்லாத இதர சத்து உள்ளது. பாலில் விட்டமின், 'ஏ' மற்றும் 'டி' சத்து செறிவூட்டப்-பட்ட அளவில் உள்ளது.புதிய வகை பாலை அறிமுகப்படுத்திய தமிழக முதல்வர், பால்வ-ளத்துறை அமைச்சர், அரசு செயலாளர், பால் வளத்துறை நிர்வாக இயக்குனர் அனைவருக்கும் பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த புதிய வகை பால் அறிமுகத்தின் மூலம், பால் நுகர்வோ-ருக்கு தரமான பால் கிடைக்கும். மேலும், பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு, கூடுதல் பணப்பலன் கிடைக்கும். பால் உற்பத்தியாளர்களுக்கு நன்மை தரக்கூடிய இந்த நடவடிக்கையை எந்த எதிர்க்கட்சிகளும் அரசியல் செய்ய வேண்டாம் எனக்கேட்-டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.