உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காவிரி-சரபங்கா-திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

காவிரி-சரபங்கா-திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

நாமக்கல், காவிரி, மேட்டூர் அணை உபரி நீரை, நாமக்கல் மாவட்ட விவசாயத்திற்கு பயன்படும் வகையில், ஏரிகளில் நிரப்ப வேண்டும்; தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, காவிரி, சரபங்கா, திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்; காவிரி ஆற்றில், 5 கி.மீ., துாரத்திற்கு, ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி, பத்து ரூபாய் இயக்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நடந்தது.பத்து ரூபாய் இயக்க பொதுச்செயலாளர் நல்வினை விஸ்வராஜ் தலைமை வகித்து, துவக்கி வைத்து பேசினார். மாநில செயலாளர் வக்கீல் சதீஸ்குமார், துணை பொதுச்செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேட்டூர் அணை உபரி நீரை, நாமக்கல் மாவட்ட ஏரிகளில் நிரப்பவும், காவிரி, சரபங்கா, திருமணி முத்தாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மாவட்ட செயலாளர்கள் பன்னீர்செல்வம், சுப்ரமணியன், மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !