உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டி.என்.இ.பி., எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

டி.என்.இ.பி., எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

நாமக்கல், நாமக்கல்லில், டி.என்.இ.பி., எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. டி.என்.இ.பி., எம்ப்ளாயீஸ் பெடரேஷன் மின்பகிர்மான வட்டக்கிளை சார்பில், நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் செயல்படும், மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, திட்டத்தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். கரூர் மண்டல செயலாளர் தண்டபாணி, திட்ட செயலாளர் சசிகுமார், அமைப்பு செயலாளர் சுப்ரமணியன், பொருளாளர் சக்திவேல் ஆகியோர் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், 2025 ஆக.,4ல், 3 கோடி ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்திட டெண்டர் விடுவதை நிறுத்தவேண்டும். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே நிறைவேற்றிட வேண்டும். கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளராக பதவி மாற்றம் செய்ய வேண்டும். ஒப்பந்த பணியாளர்களை அடையாளம் கண்டு பணியமர்த்திட வேண்டும். பகுதிநேர பணியாளர்களை பணியமர்த்திட வேண்டும் என்பது, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி