உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பி.டி.ஓ., கடத்தல் விவகாரம்: 3 பஞ்., ஆவணங்கள் தணிக்கை செய்து கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

பி.டி.ஓ., கடத்தல் விவகாரம்: 3 பஞ்., ஆவணங்கள் தணிக்கை செய்து கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் பி.டி.ஓ., கடத்தல் விவகாரத்தில், மூன்று பஞ்.,களின் ஆவணங்களை தணிக்கை செய்து, மாவட்ட கலெக்ரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் பஞ்., யூனியன் பி.டி.ஓ.,வாக பணிபுரிந்தவர் பிரபாகரன், 54; காடச்சநல்லுார் பஞ்., செயலாளராக பணிபுரிந்தவர் நந்தகுமார், 42; இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, நந்தகுமார் மற்றும் இவரது நண்பர் ஈஸ்வரன், ஈரோட்டை சேர்ந்த சிவா உள்பட சிலர், கடந்த, 4ல் பணிமுடிந்து காரில் சென்ற பி.டி.ஓ., பிரபாகரனை கடத்தி, பணம் கேட்டு மிரட்டினர். போலீசார் தீவிரமாக தேடுவதை அறிந்து, அவரை பாதி வழியில் இறக்கிவிட்டு தப்பினர். இந்நிலையில், பி.டி.ஓ.,வை கடத்திய காடச்சநல்லுார் பஞ்., செயலாளர் நந்தகுமார், 42, ஈரோட்டை சேர்ந்த சிவா, 29, ஆகிய இருவரை, கடந்த, 7ல் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஈஸ்வரன் உள்ளிட்ட சிலரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே, கடந்த, 12ல் காடச்சநல்லுார் பஞ்., செயலாளர் நந்தகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், பி.டி.ஓ.,வையும் சஸ்பெண்ட் செய்து கலெக்டர் உத்தரவிட்டார். காடச்சநல்லுார் பஞ்., செயலாளராக பணிபுரிந்த நந்தகுமார், ஏற்கனவே களியனுார் அக்ரஹாரம் பஞ்சாயத்தில் செயலளராக, இரண்டு ஆண்டு பணிபுரிந்துள்ளார். அப்போது, களியனுார் அமானி பஞ்., செயலளராகவும் கூடுதலாக கவனித்து வந்துள்ளார்.இதனால், கலெக்டர் துர்காமூர்த்தி உத்தரவுப்படி, கடந்த, 11ல், ஆறு பேர் கொண்ட அதிகாரிகள் குழு, பள்ளிப்பாளையம் யூனியன் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு, நந்தகுமார் பணிபுரிந்த பஞ்.,களின் வரவு, செலவு கணக்கு, திட்டப்பணிகள், ஆவணங்களை தணிக்கை செய்தனர். இதன் அறிக்கையை, மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைத்தனர். அறிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாக தெரிகிறது. இதனால் பள்ளிப்பாளையம் யூனியனில் பல அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ