உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 100 நாள் வேலை கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், சித்தம்பூண்டி ஊராட்சி பகுதி மக்களுக்கு, 100 நாள் வேலை வழங்கக்கோரி, தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர் பழனிவேலு தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் ஜெயராமன், திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் பூமலை, ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் சுப்ரணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில், பரமத்தி ஊராட்சி ஒன்றியம், சித்தம்பூண்டி ஊராட்சி, கொண்டரசம்பாளையம் பகுதியில், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு தொடர்ந்து, 100 நாள் வேலை வழங்க வேண்டும். அங்கு வேலை செய்யும் களப்பணியாளரை இடம்மாற்றம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கேஷம் எழுப்பினர். இதில் நுாறு நாள் திட்ட தொழிலாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !