உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாவட்டத்தில் 96.80 மி.மீ., மழை

மாவட்டத்தில் 96.80 மி.மீ., மழை

நாமக்கல்,; தென்மேற்கு வங்கக்கடல் முதல், மத்திய மேற்கு வங்கக்கடல் வரை, வளிமண்டலத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. வடக்கு கேரளா முதல் கர்நாடகா வரை, வளிமண்டலத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு, பல்வேறு இடங்களில், கனமழையும், லேசான மழையும் பெய்தது. மழை காரணமாக, தாழ்வான பகுதியில், மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. நாமக்கல் மாவட்டத்தில், நேற்று முன்தினம் காலை, 6:00 முதல், நேற்று காலை, 6:00 மணி வரை பெய்த மழையளவு (மி.மீ.,ல்) பின்வருமாறு:மங்களபுரம், 11.40, நாமக்கல், 10, புதுச்சத்திரம், 8, ராசிபுரம், 3, சேந்தமங்கலம், 24.60, கலெக்டர் அலுவலகம், 4.80, கொல்லிமலை, 35 என, மொத்தம், 96.80 மி.மீ., மழை பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ