உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தாலுகா ஆபீஸ் கட்டட பணி தரம் ஆய்வு செய்ய கோரிக்கை

தாலுகா ஆபீஸ் கட்டட பணி தரம் ஆய்வு செய்ய கோரிக்கை

நாமக்கல், ராசிபுரத்தில் கட்டப்பட்டு வரும் புதிய தாலுகா அலுவலக கட்டுமான பணியை தர ஆய்வு மேற்கொள்ள கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தியிடம், ராசிபுரத்தை சேர்ந்த சசிகலா ஆதரவாளர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: ராசிபுரம் பழைய தாலுகா அலுவலகம் எதிரே உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தில், ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தாலுகா அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த கட்டடம் திறப்பு விழாவுக்காக அவசர கதியில் வேகமாக கட்டப்பட்டு வருகிறது. எனவே இந்த கட்டட பணிகளை தர ஆய்வு செய்து தரமாக கட்டட பணிகள் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை