இரவு நேரத்தில் நிறுத்திய பஸ்களை இயக்க கோரிக்கை
இரவு நேரத்தில் நிறுத்தியபஸ்களை இயக்க கோரிக்கைசேந்தமங்கலம், செப். 20-இரவு நேரத்தில் நிறுத்தப்பட்ட பஸ்களை, மீண்டும் இயக்க கோரிக்கை எழுந்துள்ளது.சேந்தமங்கலம், பேளுக்குறிச்சி, காளப்பநாய்க்கன்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில் இருந்து தினமும் நாமக்கல்லுக்கு, கட்டட தொழிலாளர்கள் முதல் பல்வேறு அலுவலகங்கள் செல்வோர் பஸ்சில் வேலைக்கு வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இரவு, 12:00 மணி வரை அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. இதில், ஏராளமான கூலி தொழிலாளர்கள் சென்று வந்தனர். கொரானாவிற்கு பிறகு கடைசி பஸ்சாக 11:30 மணிக்கு பேளுக்குறிச்சி வரை சென்று வந்தது. பின், இந்த பஸ் நிறுத்தப்பட்டது.தற்போது இரவு, 10:00 மணிக்கு பேளுக்குறிச்சி வழியாக மேலப்பட்டி வரை செல்லும் 14ம் நம்பர் பஸ் மட்டுமே சேந்தமங்கலம் வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்ஸில் கூலி தொழிலாளர்கள், முதியவர்கள் நிற்க கூட இடமின்றி பயணம் செய்கின்றனர். எனவே, இரவு நேரத்தில் சேந்தமங்கலம், காளப்பநாய்க்கன்பட்டிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.