உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவான கணவருக்கு காப்பு

மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவான கணவருக்கு காப்பு

நாமக்கல், மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடி தலைமறைவான கணவரை, போலீசார் கைது செய்தனர்.நாமக்கல், காவேட்டிபட்டியை சேர்ந்தவர் பாஸ்கரன், 48; சரக்கு ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சித்ரா, 38; தம்பதியருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த, 20ல் ஏற்பட்ட சண்டையின் போது, மனைவி சித்ராவின் கழுத்தை வேட்டியால் இறுக்கி கொலை செய்த பாஸ்கரன், தப்பி ஓடி தலைமறைவானார். நாமக்கல் போலீசார் பாஸ்கரனை தேடி வந்தனர். நேற்று, நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சுற்றித்திரிந்த பாஸ்கரனை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது:பாஸ்கரனுக்கும், கரூர் மாவட்டம், பசுபதிபாளையத்தை சேர்ந்த பெரியசாமி மகள் சித்ராவுக்கும் கடந்த, 2007ல் திருமணமாகி உள்ளது. அவர்களுக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். சித்ராவின் குடும்பத்தார் உதவி ஏதும் செய்வதில்லை என, பாஸ்கரன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். மேலும், சம்பவத்தன்று சித்ராவின் தந்தை பெரியசாமியின் பெயரில் உள்ள சொத்தில் பங்கு கேட்குமாறு பாஸ்கரன் தகராறு செய்துள்ளார். அதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், கழுத்தை நெறித்து கொலை செய்தது தெரியவந்தது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை