உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.40 கோடியில் சாலை விரிவாக்கம் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

ரூ.40 கோடியில் சாலை விரிவாக்கம் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

சேந்தமங்கலம், சேந்தமங்கலம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட நாமக்கல்-துறையூர் சாலையில், ரெட்டிப்பட்டியில் இருந்து எருமப்பட்டி வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை மூலம் ரோடு விரிவாக்கம் செய்ய அரசிடம் நிர்வாக அங்கீகாரம் பெறப்பட்டது.இதை தொடர்ந்து, முதல் கட்டமாக, 9.20 கி.மீ., துாரத்திற்கு, 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இருவழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. தற்போது, தடுப்பு சுவர் அமைத்தல், சிறு பாலம் கட்டுதல், துாசூர் கடக்கால் பகுதியில் உயர் மட்ட பாலம் அமைத்தல், சாலை அகலப்படுத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இப்பணியை, சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் சசிக்குமார் ஆய்வு செய்தார். அப்போது, சாலையின் அகலம், ஜல்லி கலவையின் விகிதத்தை பரிசோதித்தார். மேலும், சாலைப்பணிதய தாமதமின்றி, விரைவாக, தரத்துடன் முடிக்க உத்தரவிட்டார். சேந்தமங்கலம் நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் சுரேஷ்குமார், உதவி பொறியாளர் பிரனேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sridharan
ஆக 28, 2025 12:24

சென்னை பெரம்பூர் பேரக்ஸ் ரோடு சாலை விரிவாக்கத்திற்கான தாமதம் என்னவோ!!


sridharan
ஆக 28, 2025 12:20

சாலை விரிவாக்கத்தின் பொழுது ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் நஷ்ட ஈடு பற்றிய விவரங்கள் பொது வெளியில் விரிவாக இல்லையே!!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை