உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டிரைவர் குடும்பத்துக்கு ரூ.10,000 நிதி

டிரைவர் குடும்பத்துக்கு ரூ.10,000 நிதி

ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளி பஸ் டிரைவர் விஜய்; இவர், சில தினங்களுக்கு முன், புதுச்சத்திரத்தில் இருந்து ஏளூர் செல்லும் வழியில் ஆட்டோ டிரைவர் அரவிந்தால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இறந்த விஜய்க்கு மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் நாகராஜன் கண்டனம் தெரிவித்ததுடன், அவர்களது குடும்பத்திற்கு தமிழக அரசு வேலை மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என, கோரிக்கை வைத்தார். நேற்று, வையநாயக்கனுாரில் உள்ள விஜய் இல்லத்திற்கு சென்ற நாகராஜ், அவரது குடும்பத்திற்கு முதல்கட்ட நிதியாக, 10,000 ரூபாய் வழங்கினார். நாமக்கல் வடக்கு மாவட்ட செயலாளர் சரவணன் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !