உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / உரிய ஆவணமில்லாத ரூ.9.27 லட்சம் பறிமுதல்

உரிய ஆவணமில்லாத ரூ.9.27 லட்சம் பறிமுதல்

ராசிபுரம்:தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளதால், மாவட்-டத்தின் பல்வேறு இடங்களில் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெற்றி விகாஸ் செக்போஸ்ட் அருகே, கண்காணிப்பு குழு தலைவர் ராமமூர்த்தி தலைமையில் போலீஸ் உள்ளிட்ட அதிகாரிகள், அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர்.அந்த காரில், கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர், 2.90 லட்சம் ரூபாயை ஆவணங்களின்றி எடுத்து சென்-றன கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த அதிகா-ரிகள், ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.'பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்களை அதி-காரிகளிடம் காண்பித்து விட்டு, கருவூலத்தில் இருந்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம்' என விஜயகுமாரிடம் அதிகாரிகள் தெரி-வித்தனர்.* குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட பள்ளிப்பாளையம் அடுத்த கீழ்காலனியில் உள்ள பயணியர் மளிகை பகுதியில், நேற்று தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகன சோத-னையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சொகுசு காரில் வந்த விஜயகுமார் என்பவரிடம் பறக்கும்படை அதிகா-ரிகள் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில், உரிய ஆவணமின்றி, 6 லட்சத்து, 37,500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ