உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பணி நேரத்தை மாற்றியமைத்ததால் துாய்மை பணியாளர்கள் போராட்டம்

பணி நேரத்தை மாற்றியமைத்ததால் துாய்மை பணியாளர்கள் போராட்டம்

நாமக்கல், பணி நேரத்தை மாற்றியமைத்து வரச்சொன்னதால், நாமக்கல் அரசு மருத்துவமனை ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 240க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகின்றனர். இவர்கள், காலை, 7:00 மணி முதல் மதியம், 3:00 மணி வரை ஒரு ஷிப்டிலும்; மதியம், 3:00 மணி முதல் இரவு, 11:00 மணி வரை ஒரு ஷிப்டிலும்; இரவு, 11:00 மணி முதல் காலை, 7:00 மணி வரை ஒரு ஷிப்டிலும் என, மூன்று ஷிப்டில் சுழற்சி முறையில் பணிக்கு வந்து செல்கின்றனர்.இரவு, 10:00 மணிக்குமேல் பஸ் வசதி இல்லை என்பதால், காலை, 6:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரையும், மதியம், 1:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரையும், இரவு, 9:00 மணி முதல் காலை, 6:00 மணி வரையும் என, பணி நேரத்தை மாற்றியமைத்து, பணியாளர்களை வர ஒப்பந்த நிறுவனத்தினர் வலியுறுத்தினர். இதை ஏற்க மறுத்த துாய்மை பணியாளர்கள், நேற்று காலை, 7:00 மணியளவில் மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் மற்றும் ஒப்பந்த நிறுவனத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஒப்பந்தத்தில் உள்ளதுபோல் நாங்கள் பணிக்கு வருகிறோம். அதற்குண்டான பஸ் வசதியை ஏற்படுத்தி தரவேண்டும். பயோமெட்ரிக் வருகை பதிவேட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என, துாய்மை பணியாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதால், காலை, 10:00 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு அனைவரும் பணிக்கு சென்றனர். இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை