உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / திறந்து கிடக்கும் பழுதான போர்வெல்

திறந்து கிடக்கும் பழுதான போர்வெல்

சேந்தமங்கலம்: முட்டாஞ்செட்டி பஞ்சாயத்தில், திறந்து கிடக்கும் போர்-வெல்லை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை ‍எழுந்துள்ளது.எருமப்பட்டி யூனியன், முட்டாஞ்செட்டி பஞ்சாயத்தில், போர்வெல் அமைக்கப்பட்டு மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல், காரியசித்தி விநாயகர் கோவில் அருகே போர்‍வெல் அமைத்து, மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி குடியிருப்புகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன், இந்த போர்வெல் பழுதடைந்ததால், அதிலிருந்த மோட்டரை வெளியில் எடுத்து சரி செய்ய எடுத்துச்சென்றுள்ளனர். ஒயர்களை அருகில் வைத்துவிட்டு இந்த போர்வெல்லை மூடாமல் அஜாக்கி-ரதையாக விட்டுள்ளனர். குழந்தைகள் விளையாடும் போது, தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, 15 நாட்களாக திறந்து கிடக்கும் இந்த போர்வெல் குழாயை மூட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை ‍விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !