உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சென்னை சர்வ சேவா டிரஸ்ட் சார்பில் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கல்

சென்னை சர்வ சேவா டிரஸ்ட் சார்பில் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கல்

பள்ளிப்பாளையம்:சென்னை சர்வ சேவா டிரஸ்ட் சார்பில், பள்ளிப்பாளையம் பகுதியில் காவிரி, வெடியரசம்பாளையம் அரசு உயர் நிலைப்பள்ளி, பள்ளிப்பாளையம் அரசு ஆண்கள், பெண்கள் பள்ளி, பாப்பம்பாளையம், கொக்கராயன்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 2024-25ம் ஆண்டில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா, பள்ளிப்பாளையம் சேஷசாயி காகித ஆலை வளாகத்தில் உள்ள புதிய கூட்டரங்கில், நேற்று முன்தினம் நடந்தது.தமிழ்நாடு அரசு முன்னாள் தலைமை வழக்கறிஞரும், சர்வ சேவா டிரஸ்டின் மேனேஜிங் டிரஸ்டருமான சோமயாஜி கலந்துகொண்டு, அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார். இதையடுத்து, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நினைவு பரிசும் வழங்கினர். நிகழ்ச்சியில், சேஷசாயி காகித ஆலை தலைவர் கோபாலரத்தனம், சர்வ சேவா டிரஸ்ட் அடிட்டர் சுரேஷ், காகித ஆலை பொது மேலாளர் அழகர்சாமி, தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !