உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்து அழிப்பு

கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்து அழிப்பு

பள்ளிப்பாளையம், அக். 22-பள்ளிப்பாளையம் பகுதியில், திருச்செங்கோடு செல்லும் சாலையில் சித்தி விநாயகர் கோவில் எதிரே, ஒருவர் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கெட்டுப்போன இறைச்சி விற்பனை செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, நேற்று மாலை, 4:00 மணிக்கு பள்ளிப்பாளையம் போலீசார், வட்டார உணவு பாதுகாப்ப அதிகாரிகள், நகராட்சி பணியாளர்கள், சம்பந்தப்பட்ட இறைச்சி கடையில் ஆய்வு செய்தனர். அப்போது, இறைச்சி கடையில் உள்ள ஒரு அறையை திறந்து பார்த்தபோது, அங்கு இருந்த குளிர்சாதன பெட்டியில், 50 கிலோ கெட்டுப்போன இறைச்சி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மேலும், செம்மறி ஆட்டு இறைச்சியில், வெள்ளாட்டின் வால் பகுதியை வைத்து, வெள்ளாட்டு கறி என விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கெட்டுப்போன இறைச்சியை பினாயில் ஊற்றி அழித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை