அரசு பள்ளி பின்புறம் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
நாமக்கல்: நாமக்கல் - பரமத்தி சாலை, காவேட்டிப்பட்டியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்று-வட்டாரத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். காவேட்டிப்பட்டி குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், வடிகால் வழியாக மாநகராட்சி நடுநிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் பின்புறம் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. போதிய வடிகால் வசதி இல்லாததால் தொடர்ந்து வெளியேற முடியாமல் தேங்கியுள்ளது. இதன் காரணமாக கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், விஷ ஜந்-துக்களின் வசிப்பிடமாகவும் உள்ளது. இதனால் மாணவ, மாண-வியர், ஆசிரியர்கள் மட்டுமின்றி, அப்பகுதி மக்களும் பாதிக்கப்ப-டுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து, போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது-மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.