மேலும் செய்திகள்
மனநலம் பாதித்தவர் கிணற்றில் விழுந்து பலி
13-Jun-2025
போதை டிரைவரால் போக்குவரத்து பாதிப்பு
09-Jun-2025
வெண்ணந்துார், வெண்ணந்துார் அடுத்த அத்தனுார் பகுதியில், கடந்த, 20ல் வெண்ணந்துார் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ராசிபுரம் பகுதியில் இருந்து அத்தனுார் நோக்கி வந்த டூவீலரில் எடுத்துச்சென்ற, 40 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர். இதையடுத்து, வெண்ணந்துார் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார், நேற்று அத்தனுார் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது, புகையிலை எடுத்து சென்றதாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அத்தனுார், பனங்காடு பகுதியை சேர்ந்த பிச்சை நாடார் மகன் சேகர், 42, என்பவர் அத்தனுார் பகுதியில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். அதில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்காக எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, கடைக்கு தற்காலிகமாக, 'சீல்' வைத்தனர்.
13-Jun-2025
09-Jun-2025