உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பள்ளி மைதானத்தில் நாகப்பாம்பு பிடிப்பு

பள்ளி மைதானத்தில் நாகப்பாம்பு பிடிப்பு

நாமக்கல்:நாமக்கல் - மோகனுார் சாலையில், தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு, 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில், 8 ஏக்கர் அளவில் விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. அந்த மைதானத்தில் கால்பந்து, நீளம் தாண்டுதல், கூடைப்பந்து, இறகுபந்து, கபடி உள்ளிட்ட விளையாட்டுகளை மாணவர்கள் ஆர்வமுடன் விளையாடுவர். மேலும், காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை கூடைப்பந்து அரங்கம் அருகே, 3 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று தென்பட்டது. அதை பார்த்த மாணவர்கள், ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் அளித்த தகவல்படி, உதவி மாவட்ட அலுவலர் தவமணி தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பு பிடிக்கும் கருவியை கொண்டு, பாம்பை லாவகமாக பிடித்து, காப்புக்காட்டில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை