உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கொல்லிமலை அடிவாரத்தில் அறுவடைக்கு தயாரான கரும்பு

கொல்லிமலை அடிவாரத்தில் அறுவடைக்கு தயாரான கரும்பு

சேந்தமங்கலம், கொல்லிமலை அடிவார பகுதியில் உள்ள காரவள்ளி மற்றும் சின்ன காரவள்ளி பகுதியில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. அந்த கரும்புகள் தற்போது நன்றாக செழித்து வளர்ந்து, அறுவடைக்கு தயாராக உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இங்கு அறுவடை செய்யப்பட்ட கரும்புகளை ஆந்திரா, மும்பை போன்ற வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. கடந்தாண்டு ஒரு ஜோடி கரும்பு, 30 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்தாண்டு நல்ல மழை காரணமாக விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், 2 ரூபாய் அதிகரித்து, ஒரு ஜோடி கரும்பு, 32 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை