உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கடைகளில் வீட்டு சிலிண்டர் பயன்பாடு அதிகரிப்பால் ஆய்வு

கடைகளில் வீட்டு சிலிண்டர் பயன்பாடு அதிகரிப்பால் ஆய்வு

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் ஒரு சில தவிர, பெரும்பா-லான டீ கடை, பேக்கரிகளில், வீட்டிற்கு பயன்படுத்தும் காஸ் சிலிண்டர்களை பயன்படுத்துவதாக குமாரபாளையம் வட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதையடுத்து, நேற்று மாலை, வட்ட வழங்கல் அதிகாரி திவாகரன் தலைமையில் அதி-காரிகள் பள்ளிப்பாளையம் பகுதியில் ஒட்டமெத்தை, சந்தை-பேட்டை, பஸ் ஸ்டாப் பகுதி உள்ளிட்ட இடங்களில் டீ கடை, பேக்கரிகளில் ஆய்வு செய்தனர். மேலும், வீட்டு காஸ் சிலிண்டர் பயன்படுத்தினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, கடை உரிமையாளர்களிடம் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !