உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அழகுமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

அழகுமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் அருகே, பருத்திப்பள்ளி கிரா-மத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள செல்வ விநா-யகர், அழகுமுத்து மாரியம்மன் கோவிலில், நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த, 25ல், யாகசாலைக்கு முகூர்த்தகால் நட்டு விழா தொடங்கியது. 31ல் காவிரியாற்றுக்கு சென்று பக்தர்கள் தீர்த்தம், முளைப்பாலிகை எடுத்து வந்-தனர். தொடர்ந்து, நேற்று காலை, 5:00 மணி வரை நான்குகால யாக பூஜை நடந்தது. காலை, 7:30 மணிக்கு, கோபுர கலசங்களுக்கு புனித தீர்த்தம் ஊற்றி கும்பாபிஷேக விழா நடந்தது. பக்தர்கள், 'ஓம்சக்தி பராசக்தி' என, பக்திகோஷம் முழங்க வழிபாடு செய்தனர். காலை, 8:30 மணிக்கு அம்ம-னுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த திடலில் பக்தர்க-ளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ