உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அசோலா வளர்க்க அறிவுரை

அசோலா வளர்க்க அறிவுரை

நாமகிரிப்பேட்டை 'அசோலா வளர்ப்பதன் மூலம் பல்வேறு பயன்களை பெறலாம்' என, நாமகிரிப்பேட்டை வேளாண்துறை, விவசாயிகளுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பு: அசோலா ஒரு நீர் பெரணி; இதை, நெல் வயல், சிமென்ட் தொட்டி, சில்பாலின் சீட் போன்றவற்றில் வளர்க்கலாம். அசோலாவை, நெற்பயிருக்கு இரண்டு முறைகளில் உபயோகிக்கலாம். ஒன்று, பயிர் நடவு செய்வதற்கு முன் பசுந்தாள் உரமாக அல்லது நடவு செய்த ஏழு நாட்களில் அசோலாவை பயன்படுத்தலாம்.அசோலா, காற்றில் உள்ள நைட்ரஜன் சத்தை கிரகிக்கும் தன்மை உடையது. கால்நடைகள், கோழிகளுக்கு தீவனமாகவும் பயன்படுத்தலாம். 25 முதல், -30 சதவீதம் புரதச்சத்து, 14 -முதல், 15 சதவீதம் வரை நார்ச்சத்து, 3 முதல், -4 சதவீதம் கொழுப்புச்சத்து, 45 முதல்,- 50 சதவீதம் வரை மாவுச்சத்துக்கள் உள்ளன. காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகிக்கும் தன்மை உடையது. கறவை மாட்டிற்கு அசோலாவை கொடுப்பதன் மூலம் பால் உற்பத்தி திறன், 15 முதல், 20 சதவீதம் அதிகரிப்பதுடன் பாலின் தரமும் மேம்படும்.இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ