| ADDED : ஜன 28, 2024 11:03 AM
நாமக்கல்: தமிழக தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) சார்பில், மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பழனியப்பன், தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் அண்ணாதுரை, மாதேஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் முத்துசாமி, உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்தார். இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைதல் உள்ளிட்ட, 2023 அக்., 12ல், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பள்ளி கல்வி இயக்குனர், தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோர் டிட்டோஜாக் உயர்மட்ட குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட, 12 கோரிக்கைகள் மீது ஆணைகளை உடனடியாக வெளியிட வேண்டும்.தொடக்கக்கல்வி துறையில் பணிபுரியும் ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கக்கூடிய மாநில முன்னுரிமையை வலியுறுத்தும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது.கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.