மேலும் செய்திகள்
இளைஞர்களை விவசாயிகளாக்க களம் இறங்கிய அமைப்பு
13-Aug-2025
நாமகிரிப்பேட்டை:பாரதிய கிசான் சங்கம் சார்பில், நேற்று நாமகிரிப்பேட்டை பகுதியில் பயிற்சி முகாம் நடந்தது.நாமக்கல் மாவட்ட பாரதிய கிசான் சங்கம் சார்பில், நேற்று நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மெட்டாலா அடுத்த உடையார்பாளையத்தில் ஒருநாள் பயிற்சி முகாம் நடந்தது. மாவட்ட தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் பூபேஷ்குமார் வரவேற்றார். மாவட்ட நிர்வாகி நமச்சிவாயம் முன்னிலை வகித்தார். பயிற்சி முகாமில், தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் நிலை, மண் பாதிப்பு, இயற்கை விவசாயத்தின் தேவைகள், பூச்சி கொல்லிமருந்து இன்றி இயற்கை உரங்களை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.மேலும், இயற்கை விவசாயத்தில் மாடுகளின் பங்கு, பயிர்களை எவ்வாறு இயற்கை மூலம் பாதுகாப்பது என்பது குறித்தும் விளக்கமளித்தனர். கூட்டத்தில், ஹைடெக் நர்சரி சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
13-Aug-2025