உணவு பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு
குமாரபாளையம்: நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பாக, உணவு வணிகர்களுக்கான பயிற்சி வகுப்பு குமாரபாளையத்தில் நடந்தது.மளிகை கடை விற்பனையாளர்கள், மொத்த விற்பனையாளர்களுக்கு பயிற்சி நடந்தது. குமாரபாளையம் வட்டார உணவு வணிகர்கள், 80 பேர் பயிற்சி பெற்றனர். மேலும் ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி, மீன் விற்பனை செய்பவர்களுக்கான உணவு பாதுகாப்பு பயிற்சி வகுப்பு நடந்தது. இதில், 70 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு இறைச்சி கடையை நடத்த பின்பற்ற வேண்டிய உணவு பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி அறிவுறுத்தப்பட்டது.பள்ளிப்பாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர் ரெங்கநாதன், குமாரபாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர் லோகநாதன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். பரிக்ஷன் நிறுவனம் சார்பாக மீனா பயிற்சியளித்தார்.