மேலும் செய்திகள்
கார் - டூவீலர் மோதி தனியார் ஊழியர் பலி
27-Sep-2025
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, நாராயண நகரை சேர்ந்தவர் பிரபா-கரன், 23; கூலித்தொழிலாளி. இவரும், நண்பர்களான சந்தோஷ்-குமார், 21, ஓபுளி, 19, ஆகியோர் டூவீலரில், சேலம்-கோவை புற-வழிச்சாலை, கவுரி தியேட்டர் மேம்பாலம் மீது, நேற்று அதி-காலை, 3:45 மணிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, முன்னால் சென்ற கார் டிரைவர், எவ்வித சிக்னலும் காட்டாமல் திடீரென நிறுத்தியுள்ளார். அப்போது, வேகமாக வந்த டூவீலர், கார் மீது மோதியது. இதில், பஞ்சர் ஆகி நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், டூவீலரில் வந்த மூவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு குமா-ரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், பிரபாகரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மற்ற இருவரும், ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
27-Sep-2025