மேலும் செய்திகள்
2 டூவீலர்கள் மோதி விபத்து: ஒருவர் கைது
29-May-2025
குமாரபாளையம், குமாரபாளையம் அருகே, கலியனுார் பகுதியை சேர்ந்தவர் பச்சியண்ணன், 48; கட்டட தொழிலாளி. இவர், 'டி.வி.எஸ்., எக்ஸல்' மொபட்டில், நேற்று முன்தினம் மாலை, 2:30 மணிக்கு, சேலம்-கோவை புறவழிச்சாலை, அங்கப்பா பில்டிங் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே வழியில், பின்னால் வந்த, 'ஹீரோ ஸ்பிளண்டர்' டூவீலர், மொபட் மீது மோதியது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த பச்சியண்ணன், படுகாயமடைந்தார். அவரை மீட்டு, ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து புகார்படி, விபத்துக்கு காரணமான, ஈரோட்டை சேர்ந்த கட்டட தொழிலாளி ராஜேஷ்குமார், 39, என்பவரை, குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர்.
29-May-2025