உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காய்கறி விதைகள் சாகுபடி விழிப்புணர்வு முகாம்

காய்கறி விதைகள் சாகுபடி விழிப்புணர்வு முகாம்

நாமக்கல், நாமக்கல் உழவர் சந்தை சார்பில், எருமப்பட்டி வட்டாரம், வடவத்துார் கிராமத்தில், 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற பழமொழிக்கேற்ப, காய்கறி விதைகளை சாகுபடி செய்வது குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. நாமக்கல் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் சேகர் தலைமை வகித்து, புதிய அடையாள அட்டை பெறுவதற்கு தேவையான ஆவணங்கள், உழவர் சந்தையின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள், அதிகாலை காய்கறி விலை நிர்ணயம், வெளிச்சந்தையில் காய்கறி விலை விபரம் சேகரித்தல், ஆங்கில காய்கறிகள், சுயஉதவி குழுக்கள் மூலம் விற்பனை செய்தல் குறித்து விளக்கினார்.மேலும், இலவச பஸ் வசதி, அதிகாலையில் கடைகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்தல், குளிர்சாதன அறையில் காய்கறிகள் சேமிக்கும் வசதி பற்றி, உதவி வேளாண் அலுவலர் கோகுல் விளக்கினார். எருமப்பட்டி உதவி தோட்டக்கலை உதவி இயக்குனர் கோபி, காய்கறிகள் சாகுபடி பரப்பளவை அதிகரிப்பது, விவசாயிகள், உழவர் சந்தைக்கு வருகை தருவதை உயர்த்துவது, தோட்டக்கலைத்துறையில் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள், சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தார். முன்னோடி விவசாயிகள், வேளாண், தோட்டக்கலை துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை