மேலும் செய்திகள்
ஊஞ்சல் உற்சவம்
03-Nov-2024
ராசிபுரம், நவ. 9-ராசிபுரம் அருகே, கோவில் திருவிழாவிற்காக, 3 நாட்கள் அரிசி சாதம் சமைக்காமல் விரதம் இருந்த கிராம மக்கள், அழியா இலங்கை அம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபட்டனர். ராசிபுரம் அடுத்த கூனவேலம்பட்டி புதுாரில், வரலாற்று பிரசித்தி பெற்ற அழியா இலங்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம், மூன்றாவது வெள்ளிக்கிழமை, பொங்கல் வைபவம் நடக்கும். இதையொட்டி, கூனவேலம்பட்டி புதுார், குருக்குபுரம், குருசாமிபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள், தங்களது வீடுகளில் அரிசி சாதம் சமைக்காமல், எண்ணெயில் தாளிப்பதை தவிர்த்து அதற்கு மாறாக சோளம், கம்பு, தினை உள்ளிட்ட மாற்று உணவுகளை சாப்பிட்டு, 3 நாள் விரதம் இருப்பர்.அதன்படி, இந்தாண்டு விரதம் இருந்த பக்தர்கள், நேற்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, பொங்கல் வைத்து விரதத்தை முடித்தனர். விழாவின் போது வாழைப்பழம் ஊஞ்சல் உற்சவம் நடப்பது வழக்கம். இதில், சுற்று வட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் கொண்டுவரும் வாழைப்பழங்களை கொண்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.குழந்தை வரம், கடன் பிரச்னை நீங்க, தொழில் செழிக்க, நோய் நொடியின்றி வாழ பல்வேறு பிரார்த்தனைகள் நிறைவேற, வாழைப்பழம் ஊஞ்சல் உற்சவம் நடப்பதாக பூசாரிகள் தெரிவித்தனர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர்.
03-Nov-2024