உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வ.உ.சி., பிறந்த நாள் விழா

வ.உ.சி., பிறந்த நாள் விழா

ப.வேலுார், :வ.உ.சிதம்பரனார், 154வது பிறந்த நாளையொட்டி, ப.வேலுார் அருகே பாண்டமங்கலத்தில், அவரது உருவ சிலைக்கு முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, வ.உ.சிதம்பரனாரின் இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கு கொண்டது குறித்தும், கப்பல் நிறுவனத்தை தொடங்கி நடத்தியது மற்றும் வ.உ.சி., இயற்றிய நான்கு புத்தகங்களும் கவிதையாக கொண்டது என, அவரது பெருமையை பொது மக்களுக்கு எடுத்துரைத்தார். பாண்டமங்கலம் டவுன் பஞ்., தலைவர் சோமசேகர், துணைத்தலைவர் பெருமாள், நவலடி ராஜா, சுந்தர் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை