உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வாரச்சந்தை கடைகள் ஏலம்: 2வது முறை ஒத்திவைப்பு

வாரச்சந்தை கடைகள் ஏலம்: 2வது முறை ஒத்திவைப்பு

சேந்தமங்கலம்:காளப்பநாய்க்கன்பட்டி டவுன் பஞ்சாயத்து பகுதியில், வாரந்தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு வரும் வியாபாரிகள், சாலையோரம் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, டவுன் பஞ்., நிர்வாகம் சார்பில், 1.30 கோடி ரூபாய் செலவில் காய்கறி விற்பனைக்கு, 50 கடைகளும், பொதுவான கடைகளாக, 14 கடைகளும் புதிதாக கட்டப்பட்டு பணிகள் முடிந்துள்ளன.இந்த கடைகளுக்கு வரி வசூல் செய்வத ற்கான ஏலம், கடந்த, 4ல் நடந்தது.இதில், கலந்துகொண்ட ஏலதாரர்கள் குறைந்த தொகைக்கு ஏலம் கேட்டதால், ஏலம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, இரண்டாவது முறையாக, நேற்று செயல் அலுவலர் ரமேஷ் தலைமையில் ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் கலந்துகொள்ள, 19 பேர் முன்வைப்பு தொகை கட்டியிருந்தனர். ஏலம் துவங்கியதும், ஏலத்தில் கலந்துகொண்டவர்கள் குறைந்த தொகைக்கு ஏலம் கேட்டனர். இதனால், ‍நேற்று நடந்த ஏலம் ரத்து செய்து, வேறொரு நாளில் ஏல தேதி அறிவிக்கப்படும் என, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி