மேலும் செய்திகள்
வரத்து அதிகரிப்பால் சின்ன வெங்காயம் விலை சரிவு
23-Feb-2025
ப.வேலுார்,:நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் தாலுகாவுக்குட்பட்ட பரமத்தி, மாவுரூட்டி, அர்த்த நாரிபாளையம், கந்தம்பாளையம், வேலகவுண்டம்பட்டி பகுதிகளில், வெள்ளை பூசணி அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இங்கு விளையும் பூசணி, கேரள, தமிழக வியாபாரிகள் நேரடியாக வயல்களுக்கே சென்று கொள்முதல் செய்கின்றனர். இரு மாதத்திற்கு முன், கிலோ பூசணி, 20 -- 30 ரூபாய் வரை விற்றது. தற்போது விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், விசேஷ நாட்கள் இல்லாததால், விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. வெள்ளை பூசணி கிலோ, 2 -- 3 ரூபாய் மட்டுமே விற்பதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'பூசணி சாகுபடிக்கு ஏக்கருக்கு, 40,000 -- 50,000 ரூபாய் செலவாகிறது. ஏக்கருக்கு சராசரியாக, 15 டன் மகசூல் கிடைக்கிறது. நடப்பாண்டு விளைச்சல் பெருகியுள்ளது. மொத்த வியாபாரிகள் சொற்ப விலைக்கு வாங்கி செல்வதால், கடுமையான நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது' என்றனர்.
23-Feb-2025