மேலும் செய்திகள்
பெண்மையை போற்றும் மனைவி நல வேட்பு விழா
01-Sep-2024
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள அறிவுத்திருக்கோவில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், மனைவி நல வேட்பு விழா, நேற்று முன்தினம் இரவு நடந்தது. அறக்கட்டளை தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். இதில், மனவளக்கலை முதுநிலை பேராசிரியர் விவேகானந்தன் கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சியில், நுாற்றுக்கும் மேற்பட்ட தம்பதியர், நேருக்கு நேராக அமர வைத்து காந்த பரிமாற்ற தவம் நடந்தது.தொடர்ந்து கணவர், மனைவிக்கு, பூ கொடுப்பதும், மனைவி, கணவருக்கு பழம் கொடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இரண்டு மணி நேரம் நடந்த நிகழ்ச்சி, பார்ப்பதற்கு, திருமணம் போன்று இருந்தது. வித்தியாசமான நிகழ்வாகவும் இருந்தது. பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
01-Sep-2024