உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பத்திரப்பதிவை ரத்து செய்ய கோரி பெண் மனு

பத்திரப்பதிவை ரத்து செய்ய கோரி பெண் மனு

குளித்தலை, நாகனுாரில் போலியாக இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் பெற்று பத்திரப்பதிவு செய்ததை ரத்து செய்ய கோரி, பாதிக்கப்பட்ட பெண் குளித்தலை சப்-கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:குளித்தலை அடுத்த நாகனுார் கிராமத்தை சேர்ந்தவர் வீரமலை மனைவி உமாதேவி. இவர்களுக்கு முத்துலட்சுமி, சங்கீதா என இரண்டு பெண்கள் உள்ளனர். கணவர் வீரமலை உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். வீரமலைக்கு சொந்தமான, 85 சென்ட் இடத்தை அவரது சகோதரர் வீரண்ணன் என்பவர் போலியாக இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் பெற்று, இளையமகள் சங்கீதாவை மிரட்டி, ஏமாற்றி மோசடியாக கிரயம் பெற்றுள்ளார்.தனது கணவர் இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழை போலியாக பெற்று எங்கள் அனுமதியில்லாமல் பத்திரப்பதிவு செய்து கொண்ட வீரண்ணன் மீதும், உடந்தையாக இருந்த மணப்பாறை பத்திரப்பதிவு அலுவலக அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலியாக பத்திரப்பதிவு செய்த பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ