உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி

சேந்தமங்கலம், சேந்தமங்கலம் அருகே, களங்காணியை சேர்ந்தவர் முத்துராஜா, 38; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம், டூவீலரில் பேளுக்குறிச்சி வழியாக ஆத்துார் சென்றுகொண்டிருந்தார். அப்போது கல்குறிச்சி பகுதியில், ஒரு வளைவில் திரும்பும்போது, எதிரே செங்கல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட முத்துராஜா படுகாயமடைந்தார். அவரை, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், முத்துராஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர். பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரான, நாமகிரிப்பேட்டையை சேர்ந்த பாரதி, 30, கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை