பைக் - கார் மோதல் தொழிலாளி பலி
மேட்டூர் :மேச்சேரி, தெத்திகிரிபட்டியை சேர்ந்த, டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி கோவிந்தசாமி, 45. அவரது மகன் யஷ்வந்த், 16. இவர், நேற்று முன்தினம் உறவினர்களுடன் திருச்செந்துார் கோவிலுக்கு சென்றுவிட்டு, நேற்று அதிகாலை, ஓமலுார் வந்தார். அவரை அழைத்து வர, கோவிந்தசாமி, ஹீரோ ேஹாண்டா பைக்கில், ஹெல்மெட் அணியாமல் ஓமலுார் சென்றார்.அதிகாலை, 3:00 மணிக்கு, மகனுடன் பைக்கில், தெத்திகிரிப்பட்டி நோக்கி புறப்பட்டார். திமிரிக்கோட்டை அருகே வந்தபோது, எதிரே வந்த, 'ஸ்விப்ட்' கார், பைக் மீது மோதியது. இதில் கோவிந்தசாமி சம்பவ இடத்தில் பலியானார். படுகாயம் அடைந்த யஷ்வந்த், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.