நாமக்கல்லில் உலக சுற்றுச்சூழல் தினவிழா
நாமக்கல், நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, வேதாத்திரி மகரிஷி நகரில் வனத்துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினவிழா கொண்டாடப்பட்டது.போலீஸ் எஸ்.பி.,ராஜேஷ்கண்ணன் முன்னிலை வகித்தார். கலெக்டர் உமா, மரக்கன்றுகளை நட்டு, விழாவை துவக்கி வைத்து பேசியதாவது: ஆண்டுதோறும் ஜூன், 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை அனைவரும் கைவிட வேண்டும். விழாவையொட்டி, மரக்கன்று நடுதல், மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு போட்டி நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு வகையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இவ்வாறு பேசினார்.வனத்துறை சார்பில் ஆயன், நீர் மருது, இலுப்பை, புங்கன் உள்ளிட்ட, 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார், வனச்சரக அலுவலர்கள் பழனிசாமி, செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.* ப.வேலுார் டவுன் பஞ்., அலுவலக வளாகத்தில், தேவையற்ற பொருட்களான பழைய எரியாத பல்புகள், டயர்கள், மின்சார இரும்பு கம்பிகளை துாய்மை பணியாளர்கள் சேகரித்தனர். குப்பைகளை சேகரித்து, அனைத்து வார்டுகளையும் சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் என துாய்மை பணியாளர்களுக்கு டவுன் பஞ்., செயல் அலுவலர் சண்முகம் அறிவுரை வழங்கினார். சுகாதார ஆய்வாளர் செல்வகுமார், துாய்மை பணி மேற்பார்வையாளர் வெங்கடேஷ் மற்றும் பலர் பங்கேற்றனர்.* கொல்லிமலை வனத்துறை சார்பில், அரசு பள்ளி மாணவர்கள் சார்பில், செம்மேட்டில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. வன அலுவலர் சுகுமார் தலைமை வகித்தார். தாசில்தார் சந்திரா பேரணியை துவக்கி வைத்தார். 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், பிளாஸ்டிக் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், கொல்லிமலை ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் இறங்கி, அங்கிருந்த பிளாஸ்டிக் பைகள், குப்பையை சேகரித்ததுடன், அருவியை பார்வையிட வந்த சுற்றுலா பயணிகளுக்கு பிளாஸ்டிக் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.