மேலும் செய்திகள்
வரத்து இல்லாததால் மஞ்சள் ஏலம் ரத்து
04-Dec-2024
நாமகிரிப்பேட்டை, ஜன. 1- நாமகிரிப்பேட்டை ஆர்.சி.எம்.எஸ்.,சில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மஞ்சள் ஏலம் நடக்கிறது. ஈரோட்டிற்கு அடுத்த பெரிய மஞ்சள் மார்க்கெட்டான நாமகிரிப்பேட்டையில், 17 தனியார் மண்டிகளும், ஆர்.சி.எம்.எஸ்., ஆகியவை செயல்படுகின்றன. தற்போது, மஞ்சள் சீசன் முடிந்துள்ளதால், 15 நாட்ளுக்கு ஒருமுறை மட்டுமே ஏலம் நடத்தப்படுகிறது.விவசாயிகள், இருப்பு மஞ்சளை மட்டுமே விற்னைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று, 10க்கும் குறைவான மஞ்சள் மூட்டைகளே விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்ததால், மஞ்சள் ஏலம் ரத்து செய்யப்பட்டது.
04-Dec-2024