உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மனைவி, மாமியாரை வெட்டிய தொழிலாளி கைது

மனைவி, மாமியாரை வெட்டிய தொழிலாளி கைது

மனைவி, மாமியாரை வெட்டிய தொழிலாளி கைதுஈரோடு:ஈரோடு, முனிசிபல்சத்திரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி நாகேந்திரன், ௪௩; இவர் மனைவி செல்வி, 41; தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். மனைவி நடத்தை மீது நாகேந்திரனுக்கு சந்தேகம் இருந்தது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன் தினம் இரவு இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், அரிவாளால் மனைவியின் கையில் வெட்டியுள்ளார். இதை தடுக்க வந்த செல்வியின் தாய் பூங்கொடிக்கும், 65, கழுத்து, கைகளில் வெட்டு விழுந்தது. இருவரும் கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் வந்தனர். இதைப்பார்த்த நாகேந்திரன் தப்பி ஓடிவிட்டார். புகாரின்படி வழக்குப்பதிந்த சூரம்பட்டி போலீசார், நாகேந்திரனை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ