உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பழைய பொருட்களை அகற்றாத நகராட்சி

பழைய பொருட்களை அகற்றாத நகராட்சி

பந்தலுார்;நெல்லியாளம் நகராட்சி அலுவலக வளாகத்தில், குவித்து வைக்கப்பட்டுள்ள பழைய பொருட்களால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.நெல்லியாளம் நகராட்சி அலுவலகம், பந்தலுார் அரசு மருத்துவமனை வளாகத்தை ஒட்டி அமைந்து உள்ளது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பொருட்கள் மற்றும் நகராட்சியில் உடைந்த குடிநீர் தொட்டிகள் போன்றவற்றை, அலுவலகத்தின் பின்பகுதியில் குவித்து வைத்துள்ளனர். தற்போது, மழை பெய்து வரும் நிலையில், இந்த பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி வருவதுடன், பாம்பு போன்ற விஷ ஜந்துக்களின் புகலிடமாகவும் மாறி உள்ளது. இதனால் சுகாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.எனவே, அலுவலக வளாகத்தில் குவிந்துள்ள கழிவுகள் மற்றும் பழைய பொருட்களை அகற்ற வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ