உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சவால்களை துணிவுடன் எதிர்கொள்ள அறிவுரை

சவால்களை துணிவுடன் எதிர்கொள்ள அறிவுரை

குன்னுார்: குன்னுார் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்டல் மையம், தென்னக படைப்பிரிவு சார்பில் சிறுவர்களுக்கான கோடைகால சாகச முகாம் நடந்தது. நாடு முழுவதிலும் இருந்து, 120 குழந்தைகள் பங்கேற்ற இம்முகாமில், மலையேற்றம், பாறையேற்றம், குதிரையேற்றம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட சாகச பயிற்சிகள் இடம் பெற்றன. மேலும், யோகா, மரம் நடுதல் மற்றும் சுற்றுலா மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பல இடங்களில் ஏற்படுத்தப்பட்டது. சுற்றுலா தலங்கள் மற்றும் வனப்பகுதிகளுக்கு குழந்தைகள் அழைத்து செல்லப்பட்டனர். நிறைவு விழாவில் பரிசுகளை வழங்கி, எம்.ஆர்.சி., கமாண்டன்ட் பிரிகேடியர் கிருஷ்ணேந்து தாஸ் பேசுகையில், ‘‘இளைய தலைமுறையினர் சவால்களை துணிவுடன் எதிர்கொண்டு, தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவத்தை வளர்த்து, சமூக விழிப்புணர்வும் சிறந்த குடிமக்களாக உருவாக வேண்டும்,’’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை