உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆஷா பணியாளர்களுக்கு மூன்று மாதமாக சம்பளம் இல்லை

ஆஷா பணியாளர்களுக்கு மூன்று மாதமாக சம்பளம் இல்லை

குன்னுார்: நீலகிரி மாவட்டத்தில், 500க்கும் மேற்பட்ட ஆஷா பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, மாதத்திற்கு, 5,000 முதல் 6,000 ரூபாய் என்ற அளவில் ஊக்கத்தொகை வழங்கும் நிலையில், கடந்த மூன்று மாத காலமாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக, சுகாதார துறை அதிகாரிகளிடம் கேட்டும் பயனில்லை. இதனால் மன உளைச்சலுக்கும் குடும்பத்தை நடத்துவதிலும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் வினோத் கூறுகையில், ‘‘பணியாளர்கள் தங்களின் வாழ்வாதார சூழ்நிலை கருத்தில் கொண்டு நிலுவையில் உள்ள ஊக்க தொகையை வழங்க வேண்டும். ஊட்டி மாவட்ட சுகாதார அலுவலகத்தில் சம்பளம் பெறும் வரை காத்திருக்கும் போராட்டத்திலும் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது,’’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !