உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூடலுாரில் தம்பி கொலை; அண்ணன் கைது

கூடலுாரில் தம்பி கொலை; அண்ணன் கைது

கூடலுார்;கூடலுார் அருகே தம்பியை கொலை செய்து விட்டு, தலைமறைவான அண்ணனை போலீசார் கைது செய்தனர்.கூடலுார் பி.சி.வி., நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார்,47. இவரின் மனைவி உஷா. இவர்களுக்கு ராகுல்,19, என்ற மகன் இருந்தார். அவர், கூடலுார் அரசு கல்லுாரியில் இளநிலை, 2ம் ஆண்டு படித்து வந்தார்.உஷாவின் முதல் கணவர் மோகன்குமார், 20 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களுக்கு, சணல், சினோய், ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் சதீஷ்குமார்; - உஷாவுடன் வசித்து வருகின்றனர். சினோய்,26, வேலைக்கு செல்லாமல் அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்தார். இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு, திருப்பூருக்கு வேலைக்கு செல்வதற்காக கூறி, உஷாவிடம், 500 ரூபாய் பெற்று சென்றார். ஆனால், திருப்பூர் செல்லாமல் இரவு வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். இதுகுறித்து கேட்ட தாய் உஷாவிடம் தகராறு செய்துள்ளார். இதனை கேட்ட, தம்பி ராகுலை தாக்கியுள்ளார்.தகவல் அறிந்து வீட்டுக்கு வந்த சதீஷ்குமார், வீட்டில் நடந்த தகராறு குறித்து, சினோயிடம் கேட்டுள்ளார். அதில் ஆத்திரமடைந்த, சினோய் கத்தியால் அவரை தாக்கினார். அதனை தடுத்த ராகுலுக்கு கழுத்து மற்றும் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக, கூடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராகுல், மேல்சிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது தொடர்பாக, கூடலுார் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது, எஸ்.ஜ., கபில்தேவ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, தலைமறைவான சினோயை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ