போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ‘சென்டர் மீடியன்’
கூடலுார்: கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட், ஊட்டி தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள, சென்டர் மீடியன் மீது, கடந்த, 24ம் தேதி, கர்நாடகா சுற்றுலா வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. அதில், ஒரு சென்டர் மீடியன் சாலை நடுவே நகர்ந்துள்ளது. இதனால், போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இரவில், சிறிய வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அதனை சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.