13 இடங்களில் முதல்வர் மருந்தகம் திறப்பு
ஊட்டி ,; நீலகிரியில், 13 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டன. ஊட்டியில், என்.சி.எம்.எஸ்., வளாகத்தில் நடந்த முதல்வர் மருந்தக திறப்பு விழாவில் மாநில அரசின் தலைமை கொறடா ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கலெக்டர் லட்சுமி பவ்யா முன்னிலை வகித்தார். மாநில அரசின் தலைமை கொறடா பேசுகையில்,'பி.பார்ம், டி.பார்ம் படித்துள்ள மாணவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவது, பொதுமக்களுக்கு மிக குறைந்த விலையில், 20 சதவீதம் முதல், 90 சதவீதம் வரை மருந்துகளை விற்பனை செய்வது ஆகியவை முதல்வர் மருந்தகத்தின் முதன்மையான நோக்கங்களாகும்,''என்றார்கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன், துணைப்பதிவாளர் மது, முத்துக்குமார் , கூட்டுறவு துறை ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.