மாவட்ட கிரிக்கெட் போட்டி; யங் ஸ்டார்ஸ் அணி வெற்றி
கோத்தகிரி; கோத்தகிரியில் நடந்த மாவட்ட அளவிலான லீக் கிரிக்கெட் போட்டியில், குன்னுார் 'யங் ஸ்டார்ஸ்' அணி வெற்றி பெற்றது.கோத்தகிரி காந்தி மைதானத்தில், மாவட்ட அளவிலான, ஏ.பி., மற்றும் 'சி' டிவிஷனுக்கான மாவட்ட அளவிலான லீக் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. மாவட்ட கிரிக்கெட் கிளப் நடத்தும் இப்போட்டி தொடரில், 'ஒவ்வொரு பிரிவிலும், தலா 10 அணிகள்,' என, 30 அணிகள் பங்கேற்று, விளையாடி வருகின்றன.ஊட்டி லிட்டில் மாஸ்டர்ஸ் மற்றும் குன்னூர் யங் ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையே, 'ஏ' டிவிஷன் பிரிவு போட்டி நடந்தது. யங் ஸ்டார்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த அணி நிர்ணயிக்கப்பட்ட, 35 ஓவர்களில், 5 விக்கெட்களை இழந்து, 223 ரன்கள் குவித்தது. அயான் மேத்யூஸ், 104 ரன்கள் எடுத்து சதம் அடித்தார். தினேஷ்குமார், 73 ரன்கள் எடுத்தார்.அடுத்து விளையாடிய, ஊட்டி லிட்டில் மாஸ்டர்ஸ் அணி, 28 ஓவர்களில், அனைத்து விக்கெட்களையும் இழந்து, 147 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. குன்னூர் யங் ஸ்டார்ஸ் அணியை சேர்ந்த பவுலர்கள் ஜனார்த் மற்றும் மனோஜ்குமார் ஆகியோர், தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர்.