மேலும் செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி விழா
17-Aug-2024
மேட்டுப்பாளையம்;காரமடை அருகே விவசாய விளை பொருட்கள் விற்பனை மையக் கட்டடம் மற்றும் விளை பொருட்கள் வைக்கும் குளிர்சாதன கட்டடம் திறக்கப்பட்டது.தமிழ்நாடு வேளாண்மை மற்றும் வேளாண் வணிகத்துறை வாயிலாக, ஸ்ரீ அரங்கநாதர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூன்றாவது கிளை, மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் நால் ரோட்டில் திறக்கப்பட்டது.இங்கு விவசாய விளை பொருட்கள் விற்பனை மையக் கட்டடம் உள்ளது. இதில் காய்கறிகள் இருப்பு வைப்பதற்கு, சூரிய ஒளியில் இயங்கும் குளிர்சாதன அறை கட்டப்பட்டுள்ளது.இதன் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு அரங்கநாதர் உழவர் உற்பத்தி நிறுவன தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். தேசிய வேளாண்மை இயக்கத்தின் தலைவர் சிவராமகிருஷ்ணன் விற்பனை மைய கட்டடத்தை திறந்து வைத்து, விற்பனையை துவக்கி வைத்தார். இது குறித்து அரங்கநாதர் உழவர் உற்பத்தி நிறுவன தலைவர் முத்துசாமி கூறுகையில், விவசாயிகள் விளை பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு, இந்த வளாகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.நேரடியாகவோ ஆன்லைன் வாயிலாகவோ பதிவு செய்து கொள்ளலாம். மேலும் தமிழகத்தில் உள்ள பிற உழவர் உற்பத்தி நிறுவனத்தினர், விவசாய விளை பொருட்களை, மதிப்பு கூட்டி விற்பனை செய்ய, 8072197134 மற்றும் 9597116339 என்ற மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும், என்றார்.இந்நிகழ்ச்சியில் அரங்கநாதர் உழவர் உற்பத்தி நிறுவனத்தின் இயக்குனர்கள் வேலுசாமி, ரங்கராஜ், ரகு மற்றும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
17-Aug-2024