மலை ரயில் பணி மனையில் லண்டன் சுற்றுலா பயணிகள்
குன்னுார்; குன்னுார் நுாற்றாண்டு மலை ரயில் பணிமனையில், லண்டனில் இருந்து வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு, ரயிலின் சிறப்பு குறித்து அறிந்து கொண்டனர்.குன்னுார்- ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் வரை நுாற்றாண்டு கடந்து இயங்கும் மலை ரயிலில் பயணம் செய்ய, சர்வதேச சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில், சுற்றுலா பஸ்சில், நாடு முழுவதும் பயணம் மேற்கொண்ட லண்டனை சேர்ந்த, 42 சுற்றுலா பயணிகள் குன்னுார் மலை ரயில் நிலையத்திற்கு வருகை தந்தனர்.அவர்கள், இங்குள்ள நுாற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயில் பணிமனையில் இன்ஜின்களை பார்வையிட்டனர். இதன் சிறப்புகள் குறித்து பணிமனை ஊழியர்களிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து செல்பி, புகைப்படங்கள் எடுத்தனர். பின், ஊட்டிக்கு பஸ்சில் சுற்றுலா சென்றனர்.